எள் தீப தத்துவம்
ADDED :3870 days ago
சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றுகிறோம். ஈமக்கிரியைக்கு ப<யன்படும் எள்ளை இறைவனுக்கு ப<யன்படுத்தலாமா என்ற கேள்வி எழும். நம்மிடமுள்ள சோகத்தை எள் குறிக்கும். இதன் பொருள் சோகத்தை ஏற்று, சுகத்தை தருபவர் சனீஸ்வரன் என்பதாகும். பாவ, புண்ணி<யங்கள் பார்த்து, எள்முனை பிறழாத தீர்ப்பளிப்பவர் சனீஸ்வரன் என்ற ரீதியிலும் எள் தீபம் ஏற்றப்படுகிறது. இவர் கருப்பு ஆடை கட்டுகிறார். சோகத்தின் நிறம் கருப்பு. நம் சோகங்களை ஏற்றதால், இவரது ஆடை கருப்பாகி விட்டது என்பர். இவரது வாகனமான காகமும் கருப்பு நிறமுடை<யது. இவ்வாகனத்திற்கு தினமும் சோறிட்டால், காகம் பறப்பது போல் நம் சோகமும் பறந்து விடும் என்பது நம்பிக்கை.