மாரியம்மன் கோவில் விழா அக்னிசட்டி ஏந்தி ஊர்வலம்
ADDED :3680 days ago
சங்ககிரி: சங்ககிரி பழைய இடைப்பாடி சாலையில், பிரசித்தி பெற்ற சிவியார்மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த மார்ச், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் கோவில் விழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, பால்குடம், பூங்கரகம் எடுத்து சங்ககிரி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை பொங்கல் விழா நடக்கிறது.