ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம்!
ADDED :3519 days ago
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி, நீருக்கு வெளியே முழுமையாக தெரிகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 77 அடிக்கு மேல் உயரும்போது, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கருவறை முகப்பு, முழுமையாக நீருக்குள் மூழ்கும். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 56.32 அடியாக சரிந்ததால், நீருக்குள் மூழ்கியிருந்த நந்தி சிலை மற்றும் கருவறை கோபுர முகப்பு முழுமையாக வெளியில் தெரிந்தது. அதை, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், பரிசலில் சென்று பார்த்தனர்.