விருதுநகர் ராமர் கோயிலில் ராமநவமி விழா துவக்கம்: ஏப்.16ல் திருக்கல்யாணம்!
ADDED :3519 days ago
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே பீடர் ரோடு ராமர் கோயிலில் ராமநவமி பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றதுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமர் ,சீதா திருக்கல்யாணம் ஏப்.16 ல் நடக்கிறது. காலை கருடாழ்வார் முத்திரை பதித்த கொடியை கண்ணன் பட்டர் கொடிமரத்தில் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏப்.,17 வரை நடக்கும் விழாவில் சூரிய பிரபை, சந்திர பிரபை, ஷேச வாகனம்,கிருஷ்ணர் வெற்றி போர் சப்பரம், கருடாழ்வார், கஜ வாகனங்களில் சுவாமி வீதியுலா வருதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப். 15ல் ராம நவமியை யொட்டி சிறப்பு திருமஞ்சனம்,அலங்காரம் நடக்கிறது. ஏப்.16 மாலை 5 மணிக்கு ராமர் ,சீதா திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.