வைகுண்டவாசருக்கு வைரமுடி அலங்காரம்!
ADDED :3519 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு வைரமுடி அலங்காரம் செய்தனர். விழுப்புரம் ஜனகவள்ளி தாயார் ச÷ மத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கடந்த 3ம் தேதி பங்குனி மாத தேய்பிறையை யொட்டி ஏகாதசி உற்சவம் நடந்தது. அன்று காலை 6:00 மணிக்கு திருமங்கள நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வைகுண்டவாச பெருமாள், மைசூர் மேலக்கோட்டை திருநாராயணபுரம் கோவி லில் உள்ளது போன்று, வைரமுடி கருட சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு பெருமாள் கோவில் உட்பி ரகாரத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து 7:30 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.