பந்தலுார் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
பந்தலுார்: பந்தலுார் அருகே நடந்த, பொன்னானி மாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே, பொன்னானி மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில், காலை, 5:30மணிக்கு மகா கணபதி ஹோமம்; காலை, 9:30மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. பகல், 12:00 மணிக்கு உற்சவகால பூஜை; மாலை, 5:30 மணிக்கு திருவிளக்கு பூஜை; இரவு, 8:00 மணிக்கு அம்மன் குடி அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் காலை, 6:00 மணிக்கு திருமஞ்சள் சாற்றுதல், 10:00 மணிக்கு பறவை காவடி மற்றும் வேல்காவடி ஊர்வலம், பூகுண்டம் மிதித்தல், அன்னதானம் மற்றும், மாலை அம்மன் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. மூன்றாம் நாள் காலை, 6:00 மணிக்கு தீபாரதனைகள், மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கரக ஊர்வலத்துடன் விழா நிறைவு பெற்றது.