உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

நாகப்பட்டினம் : நாகையடுத்த வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும் மாதா கோவிலில் ஆண்டுதோறும், ஆக., 29ம் தேதி ஆண்டு திருவிழா துவங்கி, செப்.,8 ம் தேதி வரை நடக்கும். துவக்க நிகழ்ச்சியாக நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் "மரியே வாழ்க என்ற விண்ணை பிளக்கும் கரகோஷத்துடன், கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு, தேவாலய முகப்பிலிருந்து, கொடி பவனி புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, 7.30 மணிக்கு தேவாலய முகப்பிற்கு கொடி பவனி வந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின், கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து தேவாலயத்தில், மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர் நடைபெற்றது. திருத்தேர் பவனி செப்.,7ம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. வரும் 8ம் தேதி அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !