மேல்காங்கேயன்குப்பம் கோவில் தேர் திருவிழா
ADDED :3519 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்காங்கேயன்குப்பம் அங்காளபரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா நடந்தது. கடந்த மார்ச் 26ம் தேதி கொடியே ற்றத்துடன் விழா துவங்கியது. தினமும், இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்து பகல் 12:00 மணிக்கு செடல் உற்சவம், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துதல், தேர் திருவிழா நடந்தது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், ஆய் வாளர் ஜெயசித்ரா, உதவி கோட்ட பொறியாளர் ரவி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.