உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழப்பம் தீர்க்கும் கோவில் பராமரிப்பு இன்றி பாதிப்பு!

குழப்பம் தீர்க்கும் கோவில் பராமரிப்பு இன்றி பாதிப்பு!

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் உள்ள பழமையான குழம்பரீஸ்வரர் கோவில், உரிய பராமரிப்பு இல்லாததால் சீரழிந்து வருகிறது. உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குழம்பரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு மேற்கொண்டால் குழப்பங்கள் விலகி தெளிவு ஏற்படும்; மன உளைச்சல்கள் தீரும் என்பது ஐதீகம். இக்கோவில் சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால்,  கோவில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்தும், கோவிலின் தளத்தின் மேல் பகுதியில் மரக்கன்றுகள் வளர்ந்தும் உள்ளன.  கோவில் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கிணறும் உரிய பராமரிப்பு இல்லாமல், துார்ந்து வீணாகி வருகிறது. மேலும், இக்கோவில் குறித்து அறநிலையத்துறையினர் கண்டு கொள்ளாத நிலையில், இப்பகுதி வாசிகள் சார்பில்  அர்ச்சகர் நியமிக்கப்பட்டு,  தினமும் ஒரு கால பூஜை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எனவே, பராமரிப்பின்றி சீரழியும் இக்கோவிலை சீரமைத்து பாதுகாக்க,  அறநிலையத்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாசிகள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !