உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கம்பட்டி முத்துமாரியம்மன் சித்திரை திருவிழா துவக்கம்

சக்கம்பட்டி முத்துமாரியம்மன் சித்திரை திருவிழா துவக்கம்

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் கொடி ஊர்வலம் நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகளுக்கு பின் கொடியேற்றப்பட்டது. ஏப். 18 வரை தினமும் அம்மன் கோயில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.  ஏப். 19, 20,21, 22 ஆகிய நாட்களில் அம்மன் பல்லக்கில் உலா வந்து அருள் பாலிப்பார். அக்கினி சட்டி, பால்குடம், காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !