உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

பொன்னியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

ஆர்.கே.பேட்டை:தமிழ் புத்தாண்டை ஒட்டி, பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவிலில், நாளை காலை, பால்குட அபிஷேகம் நடைபெற உள்ளது. தமிழ் புத்தாண்டு பிறப்பை ஒட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பொதட்டூர்பேட்டை, பொன்னியம்மன் கோவில் மற்றும் பொதட்டூர்பேட்டை மகா காளியம்மன் கோவில்களில், துர்முகி புத்தாண்டை ஒட்டி, நாளை காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடக்கிறது.ஊர்வலமாக கொண்டு வரப்படும் பால்குடங்கள், முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடையும். மாலை 6:00 மணிக்கு, பொன்னியம்மன் கோவிலில், குத்துவிளக்கு பூஜை நடைபெறும். 30ம் ஆண்டாக நடைபெறும் இந்த உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !