செஞ்சி கவரை கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3568 days ago
செஞ்சி: கவரை கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா கவரை கிராமத்தில் விநாயகர், பொறையாத்தம்மன், எல்லைபிடாரி, கெங்கையம்மன், அங்காளபரமேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 10 ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியும், மாலை பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜையும், இரவு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தன. நேற்று முன்தினம் காலை 9: 30 மணிக்கு கடம் புறப்பாடும், 9:50 மணிக்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து பொறையாத்தம்மன், எல்லைபிடாரி, கெங்கையம்மன், அங்காளபரமேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.