உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முட்டத்தூர் கோவில் கும்பாபிஷேக விழா

முட்டத்தூர் கோவில் கும்பாபிஷேக விழா

விக்கிரவாண்டி: முட்டத்துார் ரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம், முட்டத்துாரில் உள்ள ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 9ம் தேதி மாலை கணபதி ேஹாமத்துடன் யாகசலை பூஜை துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 9:23 மணிக்கு, சேலம் பிரேம்ஜி பட்டாச்சாரியார் முன்னிலையில், கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக குழு முகிலன், அரங்கநாதன், புகழ், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அன்பழகன், கருணாநிதி மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !