ஜெனகநாராயணபெருமாள் சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா
ADDED :3509 days ago
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் சுவாமி கோயிலில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, நேற்று திருக்கல்யாண திருவிழா நடந்தது.இக்கோயிலில் ஏப்.,8 முதல் 11 நாட்கள் பங்குனி பிரம்மோத்சவ திருவிழா நடக்கிறது. நேற்று 7வது நாள் திருக்கல்யாணம் நடந்தது. சீனிவாசராகவ சாஸ்திரி யாகபூஜை செய்ய, வரதராஜ் பண்டிட் பெண் வீட்டாராகவும், ரகுராம பட்டர் மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்தனர். ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி லதா செய்திருந்தார்.