முருகப்பெருமானுக்கு சரவணபவ விநாயகருக்கு என்ன?
ADDED :5243 days ago
முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற மந்திரம் இருப்பது போல, விநாயகப்பெருமானுக்கும் மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப்பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம் மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார்.