வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ஊத்துக்கோட்டை:ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 22ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, நடைபெற உள்ளது.ஊத்துக்கோட்டை வட்டம், ராமலிங்காபுரம் கிராமத்தில் உள்ளது ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பகுதிவாசிகள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கும் பணி நடந்தது. பணிகள் முடிந்து, வரும் 22ம் தேதி, வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும், 20ம் தேதி காலை, 4:00 மணிக்கு விஜயகணபதி பூஜை, கவுரி பூஜை, கோ பூஜை, ரக் ஷா பந்தனம், நவக்கிரக பூஜையும், மாலை, 4:00 மணிக்கு, அக்னி பிரதிஷ்டை, லட்சுமி கணபதி ஹோமம்,ஆவாஹித தேவதை பூஜையும் நடைபெறும்.வரும், 22ம் தேதி காலை 5:00 மணிக்கு, வேத பாராயணம், ஆவாஹித தேவதை பூஜைகள் மற்றும் காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை 4:00 மணிக்கு, சுவாமியின் படம் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.