புற்றிங்கல் கோவில் தரிசனத்திற்கு திறப்பு!
ADDED :3501 days ago
கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள, பரவூர் புற்றிங்கல்தேவி கோவில் திருவிழாவில், வாண வேடிக்கை நடத்தப்பட்டதில், பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 108 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், புற்றிங்கல் தேவி கோவில், நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. கோவில் தந்திரி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி, அதிகாலையில், கோவில், கருவறை நடையை திறந்து, பூஜைகள் செய்தார். இதில், உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.