பூலோகநாதர் கோவிலில் ‘கடம்ப பூ’ ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசயம்
ADDED :7 minutes ago
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு தனி சன்னதி உள்ளது.
இந்த கோவிலின் தல விருட்சம் வன்னி மரம். இந்த கோவிலில், முருகனுக்கும்,பெருமாளுக்கும் கடம்ப பூவால் அர்ச்சனை செய்வது சிறப்பாகும். இந்த கோவிலில் கடம்ப மரம் வளர்த்து வருகின்றனர். இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் மட்டுமே பூக்கள் பூக்கும். இந்த பூவின் நறுமணத்தை முகர்ந்தால் உடல் ஆரோக்கியம் பெறும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலில் நேற்று கடம்ப மரத்தில் பூக்கள் பூத்து ரம்மியமாக காட்சியளித்தன. வித்தியாசமான அழகுடன் காணப்படும் இந்த பூவை காண பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.