உடுமலை மாரியம்மன் கோவிலில் நாளை கம்பம் நடுதல்
ADDED :3501 days ago
உடுமலை: மாரியம்மன் கோவிலில், நாளை மாலை, தேர்த்திருவிழாவுக்கான கம்பம் போடப்படுகிறது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்., 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன. நாளை இரவு, 8:30 மணிக்கு, திருவிழாவுக்கான கம்பம் போடப்படுகிறது. ஏப்., 22ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, கொடியேற்றமும், மதியம், 2:00 மணி முதல், பூவோடு எடுக்கப்படுகிறது. ஏப்., 28ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, திருத்தேரோட்டம் நடக்கிறது.