உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயில் தயாரிப்பு கஸ்தூரி மஞ்சள் குங்குமம் விற்பனை!

மீனாட்சி அம்மன் கோயில் தயாரிப்பு கஸ்தூரி மஞ்சள் குங்குமம் விற்பனை!

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தயாரிக்கப்படும் கஸ்துாரி மஞ்சள் ஸ்பெஷல் குங்குமம் விற்பனை செய்யப்படுகிறது.மீனாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சத்தியமங்கலம் பன்னாரி மாரியம்மன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் தலா ரூ.21 லட்சம் மதிப்பில், தானியங்கி இயந்திரங்கள் மூலம் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. கும்பகோணம் மகாமகம் விழாவிற்காக, மீனாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் சார்பில் மூன்று கிராம் எடையில் பத்து லட்சம் கஸ்துாரி மஞ்சள் குங்கும பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. கஸ்துாரி மஞ்சளுக்கு புகழ்பெற்ற ஈரோடு மாவட்டத்தில் இருந்து தரமான மஞ்சள் கிழங்குகள் வரவழைக்கப்பட்டு, ரசாயன பொருட்களை தவிர்த்து, நல்லெண்ணெய் கலவையில் கஸ்துாரி மஞ்சள் ஸ்பெஷல் குங்குமம் தயாரிக்கப்படுகிறது.மகாமகம் விழாவிற்கு பின் கோயில்களின் தேவைக்காகவும், பக்தர்களுக்கு வழங்கவும் தொடர்ந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. 100 கிராம் பாக்கெட் ரூ.35. தவிர 3 கிராம், 5 கிராம், 10 கிராம், 40 கிராம் அளவுகளில் குங்கும பாக்கெட்டுகள் கோயில் ஸ்டால்களில் விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !