உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரமேரூர் காலீஸ்வரர் திருக்கல்யாணம்

உத்திரமேரூர் காலீஸ்வரர் திருக்கல்யாணம்

உத்திரமேரூர்: சீட்டஞ்சேரி, காலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த சீட்டஞ்சேரியில் சிவகாமி சுந்தரி சமேத காலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான விழா கடந்த, 12ம் தேதி காலை, 4:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, சூரிய பிரபை, சந்திர பிரபை மற்றும் நாகவாகனம் உற்சவம், ரிஷபவாகனம் உற்சவங்கள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மலரால் அலங்கரிக்கப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அப்பகுதி முக்கிய வீதிகளில் சுவாமி சிவகாமி சுந்தரியுடன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !