/
கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரைத் திருவிழா: அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்..பக்தர்கள் பரவசம்!
மதுரை சித்திரைத் திருவிழா: அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்..பக்தர்கள் பரவசம்!
ADDED :3501 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
விழாவில் ஏப்.,18ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,19ல் திருக்கல்யாணம் நடந்தது. இன்று தேரோட்டத்திற்காக உச்சிக் கால பூஜை வரை அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன. தேர்களை பாதுகாக்கும் தேரடி கருப்பு சுவாமிக்கு அதிகாலை பூஜை செய்து சுவாமியையும், அம்மனையும் தேர்களில் எழுந்தருள செய்தனர். சக்கரங்களுக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா... கோஷங்களுக்கு இடையே சுவாமி தேர் காலை 6.10 மணிக்கு புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள்தரிசனம் செய்து வருகின்றனர்.