உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நாளை நடக்கிறது. கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 20ம் தேதி இரவு வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் வீதியுலாவும் நடக்கிறது. தொடர்ந்து 21ம் தேதி சித்திரை பவுர்ணமி விழாவில் சுவாமி சிறப்பு தரிசனம், தீபாராதனை, விஷேச பிரார்த்தனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மஞ்சக்கொல்லை கிராம மக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !