உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3504 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மங்களேஸ்வரி, பிரியாவிடை மங்களேஸ்வரர் உற்சவ மூர்த்திகளாய் நான்குரத வீதிகளிலும் உலா வந்தனர். நலுங்கு உருட்டுதல், மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரைக்கு பின்னர் மாலை 5.50 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. சிவ, சிவ கோஷம் முழங்க பக்தர்கள் அட்சதை துாவினர். அன்னதானம் நடந்தது.