பிள்ளையாரைத் திருடாதீர்...
ADDED :5245 days ago
யாரும் அறியாமல் களவு செய்து பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிறப்பாக அருள்புரிவார் என்ற எண்ணம் நம் மக்களிடையே உண்டு. விநாயகருக்கு மந்திரபிரதிஷ்டை கூடத் தேவையில்லை. மஞ்சள், சாணம், அரிசிமாவு, வெல்லம், களிமண் என்று எதில் செய்தும் இவரை வழிபட்டாலும் பலன் தரக்கூடியவர். இதனை, பிடிச்சு வைத்தால் பிள்ளையார் என்றே குறிப்பிடுவர். அருகம்புல்லும், எருக்கம்பூவும் விரும்பிஅணிபவர். அப்படிப்பட்ட பிள்ளைக் கடவுளைத் திருடி வைக்க வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. வெள்ளை உள்ளம் தான் அவர் குடியிருக்கும் இடம். எளிமையும், பக்தியும் அவர் விரும்பும் ஆராதனை என்பதை உணரவேண்டும்.