சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
ADDED :3504 days ago
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று சித்திரைத் தேரோட்டம் நடந்தது. ஏப்.,12ல் பூர்வாங்க பூஜை,மறுநாள் கொடியேற்றி காப்புக்கட்டி மகோற்சவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி தேவியருடன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று காலை ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினார்.தொடர்ந்து பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.மாலை 4.33 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.கோயிலில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. பின்னர் 10ம் திருநாள் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது.