சிங்கம்புணரியில் சித்ரா பவுர்ணமி பால்குட விழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாத சுவாமி கோயில் சித்ரா பவுர்ணமி பால்குட விழா நடந்தது. பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்தனர். பக்தர்கள் சீரணி அரங்கு ஐயப்பன் கோயிலில் இருந்து பால்குடமெடுத்து சித்தர் கோயிலுக்கு சென்றனர்.அங்கு பாலாபிஷேகம்,ஆராதனை நடந்தது. கோயில் வளாகத்தில் முத்து விநாயகர்,வராஹி அம்மன்,முத்துக்கருப்பர்,நாகராஜா தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. * பிரான்மலையில் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வந்தனர். பவுர்ணமி கிரிவலத்தில் 500 க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.ஒடுவன்பட்டி, மேலவண்ணா யிருப்பு, மின்னமங்கலப்பட்டி,பிச்சமங்கலப்பட்டி வழியாக, 14 கி.மீ.,துõரம் நடந்து மலையில் உள்ள 19 கோயில்களை தரிசித்து,அழகிய சொக்கநாதர் கோயிலை அடைந்தனர்.அங்கு சிவபெரு மானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.