யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா!
ADDED :5222 days ago
கூடலூர்:முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாலை 5.00 மணிக்கு துவங்கியது. வளர்ப்பு யானைகளான பொம்மன், மசினி, உதயன் ஆகியவை விநாயகருக்கு மணி அடித்து பூஜை செய்து தும்பிக்கையை தூக்கி பிளிரியபடி விநாயகரை வணங்கின. இதன் பின், யானைகளுக்கு வெண்பொங்கல், லட்டு வழங்கப்பட்டது. இந்த பூஜையின் போது கொட்டும் மழையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். துணை இயக்குனர் அமீர்ஆஜா, புஸ்பாகரன், சுந்தர்ராஜன், டாக்டர் கலைவாணன் பங்கேற்றனர்.