உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலிவந்தி கிராமத்தில் கும்பாபிஷேக விழா

புலிவந்தி கிராமத்தில் கும்பாபிஷேக விழா

செஞ்சி: புலிவந்தி கிராமத்தில் ஏழு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.  செஞ்சி தாலுகா புலிவந்தி கிராமத்தில் விநாயகர், சக்தீஸ்வரர், சிவசக்தி மாரியம்மன், உத்தமி அம்மன், முருகர், அய்யனார், வீரனார், அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரஹங்கள் ஜீர்ணோதாரண மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 25ம் தேதி காலை 8:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9:00 மணிக்கு விநாயகர்  கோவிலிலும், 9:15 மணிக்கு சக்தீஸ்வரர், சிவசக்தி மாரியம்மனுக்கும், 9:45 மணிக்கு உத்தமி அம்மன், முருகன் கோவில்களுக்கும் மகா கும்பாபிஷேம் நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு அய்யனார், பூரணி, பொற்களை வீரனாருக்கும், 10:15 மணிக்கு அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !