புதுச்சேரி வன்னியபெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் ஹோமம்!
ADDED :3649 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று ஹயக்ரீவர் ஹோமம் நடந்தது. முதலியார்பேட்டை யில் அமைந்துள்ள வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் (சித்திரை பெருவிழா) கடந்த 26ம் தேதி துவங்கியது. அதையொட்டி, 25ம் தேதி காலை பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனமும், இரவு அனுக்கை, ஸ்ரீ சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று, ஹயக்ரீவ ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. இரவு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (29ம் தேதி) இரவு கருட சேவை நடக்கிறது.