உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் சங்கல்ப மண்டபம் ஆக்கிரமிப்பு: நவபாஷாணத்தில் பக்தர்கள் அவதி!

தேவிபட்டினம் சங்கல்ப மண்டபம் ஆக்கிரமிப்பு: நவபாஷாணத்தில் பக்தர்கள் அவதி!

தேவிபட்டினம்: நவபாஷாண கோயிலில் சங்கல்ப மண்டபத்தை அர்ச்சகர்கள் ஆக்ரமிப்பதால் தங்குவதற்கு வழியின்றி பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேவிபட்டினம் அருகில் உள்ள நவபாஷாண கோயில் தர்ப்பணம் மற்றும் பரிகார பூஜைகளுக்கு பிரசித்தி பெற்றதாகும். இங்கு விளங்கி வருகிறது. இங்கு பித்ரு தோஷம், திருமண தடை, ஏவல், சூனியம் உள்ளிட்டவற்றிற்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசெல்கின்றனர். பக்தர்கள் தங்கி செல்வதற்காக கடற்கரையையொட்டி சங்கல்ப மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை பரிகார பூஜைகள் செய்வதற்காக அர்ச்சகர்கள் ஆக்ரமித்துள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அர்ச்சகர்களின் ஆக்ரமிப்பிலிருந்து சங்கல்ப மண்டபத்தை மீட்டு பக்தர்களை தங்க வைக்க இந்து அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !