ஸ்ரீபெரும்புதூர்ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்!
ADDED :3658 days ago
ஸ்ரீபெரும்புதூர்: ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேர்த் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. பிரசித்தி ஆதிகேசவப்பெருமாள் கோயில் சி த்திரை பிரம்மோற்சவம் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆதிகேசவப் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமியை தரிசித்தனர்.