உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணியனூர் காளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

மணியனூர் காளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

மணியனூர்: மணியனூர் காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று தீ மிதித்தனர். சேலம், மணியனூர் காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதையொட்டி, நேற்று தீ மிதி விழா நடந்தது. மாலை, 3 மணிக்கு கரியபெருமாள் கரட்டில் இருந்து, சுவாமி வீரகந்தகம் புறப்பட்டு வந்தது. அதை தொடந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். நாளை காலை, சமபந்தி விருந்து, இரவில் சத்தாபரண ஊர்வலம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !