கள்ளக்குறிச்சியில் நடராஜருக்கு சித்திரை திருவோண நட்சத்திர வழிபாடு!
ADDED :3801 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடராஜருக்கு சித்திரை திருவோணம் நட்சத்திர வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை ஆனந்தமா நடராஜருக்கு சித்திரை திருவோணம் நட்சத்திர வைபவம் நடந்தது. நிகழ்ச்சியையோட்டி சுவாமிக்கு 21 வகை அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பன்னிரு திருமுறை விண்ணப்பித்தனர். நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. திரிசங்கு, கயிலை வாத்தியம், பிரம்மதாளம் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.