உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் விடையாற்றல் நிகழ்ச்சி

கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் விடையாற்றல் நிகழ்ச்சி

கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவில், அக்கினி கம்பம் திருவிடையாற்றல் நிகழ்ச்சி நடந்தது. கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் திருவிழா, கடந்த மாதம், 13ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது. விழாவின் ஒருகட்டமாக, நேற்று காலை அம்மனுக்கு மலர் அலங்கார வழிபாடும், பகலில் அன்னதானமும் நடந்தது. இரவில், அக்னி கம்ப திருவிடையாற்றல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !