எத்தையம்மன் கோவிலில் பூ குண்டம் விழா
ADDED :3560 days ago
மஞ்சூர்: மஞ்சகம்பை மானிஹாடா எத்தையம்மன் கோவிலில் நடந்த, 44ம் ஆண்டு பூ குண்டம் திரு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மஞ்சூர் அடுத்துள்ள மானிஹ ாடா, மகா சக்தி எத்தையம்மன் மற்றும் சத்திய நாகராஜர் கோவிலில், 44ம் ஆண்டு, பூ குண்ட திருவிழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு சுப மங்கள கொடியேற்றுதல்; எத்தையம்மன் வெண்ணிற கொடியேற்றுதல்; பூஜ்ய பால மலை சுவாமிகளின் பட திறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. பகல், 3:00 மணிக்கு நடந்த பூ குண்டம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்தில் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று காலை, 10:00 மணி முதல், பகல்,3:00 மணி வரை மறு பூஜை, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.