குளித்தலை மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
ADDED :3560 days ago
குளித்தலை: குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு குளித்தலை சுற்றியுள்ள கிராமங்களான பரளி, வாலாந்தூர், மேட்டு மருதூர், பெரியபாலம், தெற்கு மணத்தட்டை, ராஜேந்திரம், கருங்களாப்பள்ளி. கடம்பர்கோவில், மலையப்ப நகர், பெரியார் நகர் மற்றும், 25க்கு மேற்பட்ட கிராமத்தில் இருந்து மின்அலங்காரத்தில் மாரியம்மன் பூ அலங்காரத்தில் உலா சென்றது. குளித்தலை, டி.எஸ்.பி., சீனிவாசன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக கடந்த ஒருவாரமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.