உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூளிப்பட்டி காளியம்மன் கோவில் விழா கோலாகலம்

தூளிப்பட்டி காளியம்மன் கோவில் விழா கோலாகலம்

பாலவிடுதி: கடவூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தரகம்பட்டி அருகே, பாலவிடுதி பஞ்சாயத்து, தூளிப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சுவாமி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிய திருவிழாவில், முதல்நாள் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி, 2ம் நாள் அலகுகுத்துதல், மாவிளக்கு எடுத்தல், மூன்றாம் நாள் கரகம் கிணற்றில் விடுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !