உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் தங்க மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

காரைக்கால் தங்க மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.  காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன்கோவில் தீ மிதித்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி அன்ன வாகனத்திலும், 26ம் தேதி சிம்ம வாகனத்திலும், 27 ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து 28 குதிரை வாகனத்திலும், 30ம் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், வெண்ணைத்தாழி கிருஷ்ணன் வேடத்தில் அம்பாள் வீதி உலா நடந்தது.  நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, அன்ன வாகனத்தில் அம்பாள் தீக்குழி முன்பு எழுந்தருள, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.  விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 3ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், நாளை 4ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !