சக்கரத்தாழ்வார் சுவாமி லட்சார்ச்சனை பெருவிழா
ADDED :3552 days ago
ப.வேலூர்: பாண்டமங்கலத்தில், சக்கரத்தாழ்வார் சுவாமி லட்சார்ச்சனை விழா நடந்தது. ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலத்தில், பிரசன்ன வெங்கட்ரமண கோவில், சக்கரத்தாழ்வார் சுவாமி லட்சார்ச்சனை பெருவிழா நேற்று நடந்தது. காலை, 9.30 மணிக்கு அனுக்ஞை சங்கல்பம், பெருமாளுக்கு விசேஷ பூஜை, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனமும், சந்தன காப்பு சாத்துபடி கூடிய லட்சார்ச்சனை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று துவங்கிய நிகழ்ச்சி, வரும், 6ம் தேதி முதல் நடக்க உள்ளது. தொடர்ந்து, 7ம் தேதி காலை, 8 மணி முதல், 12 மணிவரை சுதர்சன ஹோமமும் நடக்க உள்ளது. இரவு, 8 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.