உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோவில் தேர்த்திருவிழா:முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

திருப்பூர் கோவில் தேர்த்திருவிழா:முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விரு கோவில்களிலும், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, 14ல், துவங்குகிறது. 15ல், கொடி யேற்றம்; 19ல், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சுவாமிகள் வீதி உலா உள்ளிட்டவை நடைபெற உள்ளது. வரும், 21ல், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம்; 22ல், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, நிலையில் உள்ள தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு, சாரம் கட்டுதல், மகுடம் ஏற்றுதல் உள்ளிட்ட அலங்கரிக்கும் பணி மேற்கொள்வதற்காக, முகூர்த்தக்கால் நடும் பணி, நேற்று நடைபெற்றது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு, இரு தேர்களுக்கும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. பட்டச்சார்யார்கள், சிவாச்சார்யார்கள், தேர் அலங்கரிக்கும் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !