உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளாபுரி அம்மன் 131ம் ஆண்டு சித்திரை பெருவிழா

சோளாபுரி அம்மன் 131ம் ஆண்டு சித்திரை பெருவிழா

உரிகம்: உரிகம் என்.டி., பிளாக், 2வது டிவிஷனிலுள்ள சோளாபுரி அம்மன், கண்ணபிரான் ஆலயங்களின், 131 ஆம் ஆண்டு சித்திரை பெருவிழா, 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 1885ல் அமைக்கப்பட்ட சோளாபுரி அம்மன் கோவிலில், 131ம் ஆண்டு சித்திரை விழாவை முன்னிட்டு, 5ம் தேதி கணபதி ஹோமம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு கோவில் தலைவர் செல்வராஜ் கொடியேற்றுகிறார். அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 8:00 மணிக்கு வீதிகளில் கோலப்போட்டியும் நடக்கிறது. மே, 6ம் தேதி காலையில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மதியம், பம்பை, சிலம்பாட்டத்துடன் கரக ஊர்வலம், கூழ் வார்த்தல், மாலையில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, அதை தொடர்ந்து சிறப்பு பூஜை இரவில், அலங்கரிக்கப்பட்ட சோளாபுரி அம்மனை புஷ்ப பல்லக்கில் நகர்வலம் கொண்டு வருகின்றனர்.

மே 7ம் தேதி மதியம், பக்தர்களுக்கு அன்னதானம், இரவு, தமிழக ஆரணி பகுதி கலைஞர்களின், கீசகன், வதம் நாடகம் நடக்கிறது. 8ம் தேதி காலையில், மஞ்சள் நீராட்டு, மதியம் அன்னதானம் இரவு, அம்மனுக்கு கும்பம் படைத்தல் 9ம் தேதி காலையில், கோவில் புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நற்பணி வாலிபர் மன்றம், வட்டார பிரமுகர்கள் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !