ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில் தேர்திருவிழா
ADDED :3550 days ago
ஈரோடு: ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில் சித்திரை திருத்தேர் பெருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஈரோடு, திருவேங்கிட சாமி வீதியில், எழுந்தருளியுள்ள, மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவில் சித்திரை திருத்தேர்விழா, ஏப், 25ல் தொடங்கியது. கட்டமுது வழங்கும் விழா, அப்பர் தில்லை திருநடன காட்சி, திருக்கயிலை கட்சி, போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நேற்று நடந்தது. சிறப்பு, மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன், தேர்வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திருத்தேரில் மகிமாலீஸ்வர், மங்களாம்பிகை பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.