உடுமலை சித்தி விநாயகருக்கு கும்பாபிேஷகம்
ADDED :3458 days ago
உடுமலை: ஆண்டியூர் சித்தி விநாயகர், சல்லிவீரய்யன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. உடுமலை, தேவனுார்புதுார், ஆண்டியூரில் அமைந்துள்ள, சித்தி விநாயகர், சல்லிவீரய்யன் கோவில் கும்பாபிேஷக விழா, மே 1ம் தேதி காலை, முளைப்பாலிகை, தீர்த்தக் குடங்கள் எடுத்தலுடன் துவங்கியது. மாலையில், திருவிளக்கு வழிபாடு, காப்பணிவித்தல் உள்ளிட்டவையும், இரவு, விமானக்கலசம் நிறுவுதலும் நடந்தன. மே 2ல் அதிகாலை திருப்பள்ளி எழுச்சியும், மூலமூர்த்திகளுக்கு காப்பணிவித்தலை தொடர்ந்து, இரண்டாம்கால வேள்வி நடந்தது. காலை, 9:00 மணிக்கு, திருக் குடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது. 9:30 மணி முதல், விமான கலசத்துக்கும், மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. மதியம், மகா அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது.