சுசீந்திரம் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்!
சுசீந்திரம்:சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆவணி திருவிழா இன்று (3ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி, சித்திரை, மாசி மாதங்களில் 10 நாட்கள் சிவனுக்கு திருவிழா நடக்கிறது. அதுபோல் மகாவிஷ்ணுவிற்கு ஆவணி மாதம் 10 நாள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டின் ஆவணி திருவிழா இன்று காலை 7.45 மணிக்கு பெருமாள் சன்னிதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாள் நடக்கும் விழாவில் தினமும் வாகன பவனி சிறப்பு வழிபாடு ஆகியன நடக்கிறது.ஒன்பதாம் நாள் விழாவான 11ம் தேதி மாலை 4 மணிக்கு விஷ்ணு சுவாமி பூதேவி ஸ்ரீதேவியுடன் தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் தேர்பவனி வந்து நிலைக்கு வருகிறது. மறுநாள் இரவு ஆராட்டு நடக்கிறது.விழா ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், கோயில் மேலாளர் ஸ்ரீமூல வெங்கடேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.