உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயண பெருமாள் தங்க வாகனத்தில் அருள்பாலிப்பு!

திருவதிகை சரநாராயண பெருமாள் தங்க வாகனத்தில் அருள்பாலிப்பு!

பண்ருட்டி: திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு, நேற்று சுவாமி தங்க வாகனத்தில் அருள்பா லித்தார். மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு நேற்று முன் தினம் 108 மூலிகைகளால் சிறப்பு ஹோமம், லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை  மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம், ஹோமம், மகாபூர்ணாஹுதி நடந்தது. மாலை 4:30 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூமி தேவி சகிதமாக  தங்க வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். இன்று (6ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தி ருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்திலும்,  உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அரு ள்பாலிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !