பராமரிபின்றி இருந்த சிவனுக்கு பூஜை தொடக்கம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் எல்ராம்பட்டில் 50முதல் 100ஆண்டுகளுக்குள் வழிபாடுயின்றியும் உரிய பராமரிப்பு இன்றியும் வெட்டவெளியில் இருந்த எம்பெருமான் நமது உலக சிவனடியார்கள் ஒன்றிணைப்பு திருக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருக்கோவிலூர் சிவ மணிகண்டன் மற்றும் உசிஒ அடியார் சிவ ஏழுமலை அய்யா இவர்களின் முயற்சியாலும் அந்த ஊர்மக்களின் மிகுந்த ஒத்துழைப்பாலும் அன்பாலும் எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனையால் பேரழகாக அலங்கரிக்கப்பட்டார்.மேலும் சிவ வழிபாடு அறியாத சுமார் 200 குடும்பங்களை நம் எளிவந்த பிரானின் பெருமைகளை திருக்கோவிலூர் அடியார் மற்றும் சென்னை கங்காதரன் அவர்களால் எடுத்துரைத்து திருவாரூர் தியாகராஜர் மற்றும் அண்ணாமலையார் திருக்கருணையால் சுவாமிக்கு ஸ்ரீ கையிலாசநாதர் உடனமர் காமாட்சி தாயார் என பெயர் சூட்டி அவ்வூர் மக்களை வழிபாட்டிற்கு கயிலாசநாதர் அழைத்து வந்துள்ளார்.உலக சிவனடியார்கள் மற்றும் ஊர் மக்களால் அங்கு தடையில்லாமல் நிரந்தரமாக சுவாமியை பராமரித்து ஆராதனை அபிஷேகம் செய்ய அவ்வூர் மக்களில் இருவரை நியமிக்கப்பட்டுள்ளோம்.இப்பெருமானுக்கு விரைவில் சுற்றுசுவர் அமைத்து மேற்க்கூரை அமைக்க எம்பெருமானால் திருவருள் கூட்டி வைத்துள்ளது.இந்த சிவத்தொண்டே உயிர் பணியில் பக்தர்களும் அடியார்களும் தங்களால் இயன்றதை கொடுத்து அல்லது விளக்கு தினமும் ஏற்றுவதற்கு தங்களால் இயன்ற எண்ணெய் வாங்கி கொடுத்து சிவபுண்ணியம் பெறுவதற்கு அவ்வூரில் மிக அருகில் உள்ள திருக்கோவிலூர் சிவ மணிகண்டன் 8973036348, 8300086838 மற்றும் சிவ ஏழுமலை 8300084738 இவர்களை தொடர்பு கொள்ளவும்.
இதுபோல் பராமரிப்பு இன்றி வழிபாடு இன்றியும் என்னற்ற சிவாலாயம் உள்ளது. சிவப்பணி புரிந்து உலக சிவனடியார்கள் ஒன்றிணைப்பு திருக்கூட்டத்தில் இணைய தொடர்பு கொள்ளவும்.சிவ ஈசுவரன் 8300087005, 9176757479
உலக சிவனடியார்கள் ஒன்றிணைப்பு திருக்கூட்டம் தலைமையகம் சென்னை.