மாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் பரவசம்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் பண்டிகையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு விமான அலகு குத்தி பக்தர்கள் அசத்தினர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழா, கடந்த, 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 25 ஆண்டுகளுக்கு பின் நாமகிரிப்பேட்டையில் நேற்று விமான அலகு குத்தி, ரமேஷ், தினேஷ், சீனிவாசன் ஆகிய பக்தர்கள் அசத்தினர். மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நாமகிரிப்பேட்டையில், முதன் முதலில், 1981ல் ராமகிருஷ்ணன் மகன் அறிவழகன் என்பவர் விமான அலகு குத்தினார். பண்டிகை முடிந்த சில நாட்களிலேயே அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது குடும்பத்தினர் யாரும் அலகு குத்தவில்லை. அறிவழகன் இறக்கும்போது, குழந்தையாக இருந்த அவரது மகன் சீனிவாசன் மற்றும் அறிவழகனின் தம்பிகள் ரமேஷ், தினேஷ் ஆகிய மூன்று பேரும், 25 ஆண்டுகளுக்கு பின் நேற்று விமான அலகு குத்தி அசத்தினர்.