புட்டுத்திருவிழாவில் பங்கேற்க முருகன் நாளை புறப்பாடு!
திருப்பரங்குன்றம் : மதுரையில் நடக்கும் புட்டுத் திருவிழாவில், பாண்டிய ராஜாவாக பங்கேற்க திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானையுடன் நாளை புறப்படுகிறார். நாளை காலை புறப்பாடாகும் சுவாமி, மாலையில் மீனாட்சி கோயிலில் எழுந்தருள்வார். இரவு மீனாட்சி சுந்தரரேஸ்வரர், பிரியாவிடை, முருகப்பெருமான், தெய்வானை மூன்று தங்க குதிரை வாகனங்களிலும், மாணிக்கவாசகர் வெள்ளி குதிரை வாகனத்திலும் புறப்பாடாகி 16கால் மண்டபத்தில் கயிறு மாற்றும் லீலையில் பங்கேற்று, ஆவணி மூல வீதியில் உலா வருவர். செப்., 7ல் சிம்மாசனத்தில் !புறப்பாடாகி, புட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்ச்சியில் பங்கேற்பர். செப். 9ல் மீனாட்சி சுந்தரரேஸ்வரர், பிரியாவிடையிடம், முருகப்பெருமான், தெய்வானை, மாணிக்கவாசகர் விடைபெறும் நிகழ்ச்சி நடக்கும். செப்., 11ல் பூ பல்லக்கில் முருகன், தெய்வானை திருப்பரங்குன்றம் திரும்புவர். தங்க ரதம்: புட்டுத்திருவிழாவில் சுவாமி பங்கேற்க செல்வதால், செப்., 6 முதல் 11 வரை திருப்பரங்குன்றம் கோயிலில் தங்க ரதம் புறப்பாடு இல்லை.