உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் திருமுறை பாடல் கல்வெட்டு திறப்பு!

சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் திருமுறை பாடல் கல்வெட்டு திறப்பு!

குறிஞ்சிப்பாடி:குள்ளஞ்சாவடி அடுத்த தீர்த்தனகிரியில் உள்ள சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில், சுந்தரர் பாடிய திருமுறைக் கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த தீர்த்தனகிரியில் உள்ள சிவக்கொழுந்தீசுவரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இக்கோவிலில், சுந்தரர் வந்து தங்கி, "நீறு தாங்கிய திருநுதலானை என தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். இந்தத் திருமுறைப் பாடல், இது வரை ஓலைச் சுவடியில் மட்டுமே இருந்து வந்தது. இப்பாடலின் கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம், 23வது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.முன்னதாக, மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தினை நிவேதனம் நடந்தது. இதைத் தொடர்ந்து, மூவர் தேவாரம் புத்தகத்தை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட, அதை ஏகாம்பரம் சரசு பெற்றுக் கொண்டார். இத்தலத்தில், நீண்ட காலமாக நிவேதனம் நடைபெறாமல் இருந்து வந்தது. வரும் 11ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், 11ம் தேதி முதல் அன்னதானம் வழங்கப்பட உள்ளது, சிவக்கொழுந்தீசுவரர் கோவில் தல வரலாற்றை, 1,000 பக்கங்கள் கொண்ட புத்தகமாகத் தயாரித்து வருகிறோம். விரைவில் வெளியிடப்படும் என, ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !